Home இலங்கை சமூகம் இலங்கையர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

0

 இலங்கையர்கள்(sri lankans) மது மற்றும் சிகரெட் பயன்பாட்டிற்காக நாளொன்றுக்கு ரூ. 1,210 மில்லியனை செலவிட்டதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது..

இந்த கணக்கெடுப்பு கடந்த2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்டுள்ளது.

இதன்படி சாராயம் அருந்துவதற்கு ரூ. 510 மில்லியன், பீருக்கு ரூ. 180 மில்லியன் மற்றும் சிகரெட்டுகளுக்கு ரூ. 520 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறைக்கு ஏற்பட்ட செலவு

மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு காரணமாக சுகாதார மற்றும் பொருளாதாரத் துறைகளில் ரூ. 237 பில்லியன் செலவு பதிவாகியுள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டில் ரூ. 165.2 பில்லியன் வரி வருவாய் பதிவாகியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது அருந்துவதால் ஆண்டுதோறும் மொத்தம் 15,000 இறப்புகள் பதிவாகின்றன, அதே நேரத்தில் சிகரெட் பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 20,000 இறப்புகள் பதிவாகின்றன.

தொற்றா நோய்களுக்கு முக்கிய காரணம்

இலங்கையில் தொற்றா நோய்கள் பரவுவதில் 80% அதிகரிப்பு இருப்பதாகவும், அதற்கு மது மற்றும் சிகரெட் நுகர்வு முக்கிய காரணங்களாக இருப்பதாகவும் ADIC சுட்டிக்காட்டியுள்ளது.

2023 ஆம் ஆண்டில் வரிகள் 20% அதிகரித்ததைத் தொடர்ந்து, மது அருந்துதல் 8.3 மில்லியன் லீட்டர் குறைந்துள்ளது, அதே நேரத்தில் வரி வருவாய் ரூ.11.6 பில்லியன் அதிகரித்துள்ளது.

சிகரெட் விற்பனையிலிருந்து வரி வருவாய் ரூ.7.7 பில்லியன் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் சிகரெட் விற்பனை 521.5 மில்லியன் யூனிட்கள் குறைந்துள்ளது என்று ADIC மேலும் தெரிவித்தது.

NO COMMENTS

Exit mobile version