Home இலங்கை சமூகம் தவறான பாதையில் ஈர்க்கப்படும் இலங்கையர்கள்: பொலிஸாரின் அதிர்ச்சி தகவல்கள்

தவறான பாதையில் ஈர்க்கப்படும் இலங்கையர்கள்: பொலிஸாரின் அதிர்ச்சி தகவல்கள்

0

வெளிநாடுகளில் இயங்கும் பல வயதுவந்தோர் வலைத்தளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் பாரிய நிதிச் சலுகைகளை வழங்குவதால், இலங்கையர்கள் அதிகளவில் ஒன்லைனில் தவறான காணொளிகளை தயாரிப்பதற்கு ஈர்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இளம் தம்பதிகள், தங்கள் அடையாளங்கள் மறைக்கப்படுவதாலும் இதுபோன்ற நடவடிக்கைகளை வீட்டிலிருந்து இரகசியமாக மேற்கொள்ளலாம் என நம்புவதாலும் இதில் ஈர்க்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

இருப்பினும், தவறான காணொளிகளை ஒன்லைனில் விளம்பரப்படுத்துவது, தயாரிப்பது அல்லது விநியோகிப்பது இலங்கையில் சட்டவிரோதமானது என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்படலாம் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.  

சட்டவிரோதமான செயல்

சில வலைத்தளங்கள் வெளிநாட்டிலிருந்து இயக்கப்பட்டாலும், அவற்றில் இலங்கையிலிருந்து பங்கேற்பது குற்றவியல் குற்றங்களின் கீழ் வருவதாகும்.

சமீபத்தில் ஒரு திருமணமான தம்பதியினர், தங்கள் சொந்த தவறான காணொளிகளை இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பணம் செலுத்தும் வயதுவந்தோர் வலைத்தளத்தில் பதிவேற்றியதற்காக நுகேகோடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version