Home இலங்கை சமூகம் வெளிநாடொன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் வெளியேற்றம்

வெளிநாடொன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் வெளியேற்றம்

0

குவைத்தில் (Kuwait) சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், 2024 ஆம் ஆண்டிற்கான குவைத் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தின் படி 10,615 இலங்கை பிரஜைகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குவைத் அரசின் வெளிவிவகார அமைச்சும் அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகமும் நடத்திய பேச்சுவார்த்தையின் அமைவாக இந்த பொது மன்னிப்பு காலம் மார்ச் 17, 2024 முதல் ஜூன் 30, 2024 வரை வழங்கப்பட்டுள்ளது.

தற்காலிக கடவுச்சீட்டுகள்

அதன்படி, சில ஆவணங்களின் அடிப்படையில் நாட்டை விட்டு வெளியேற தற்காலிக கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதன் பின்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  

மேலும் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் குவைத்துக்கான இலங்கை தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியத்தின் முழு மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் தூதரக அதிகாரிகளால் செய்யப்பட்டுள்ளன.

 

NO COMMENTS

Exit mobile version