Home இலங்கை சமூகம் மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

0

மியான்மாரில் (Myanmar) உள்ள சைபர் முகாம்களில் மேலும் நான்கு இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விடயத்தினை வெளி விவகார அமைச்சு (Ministry of Foreign Affairs) தெரிவித்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களை மீட்பதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருவதாக மியான்மாரில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

 30 இலங்கையர்கள் மீட்பு

இதற்கிடையில், அவர்களில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக அந்த தூதரகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை மியன்மாரில் சைபர் குற்றவாளிகளின் பிடியிலிருந்து இதுவரை 30 இலங்கையர்கள் மீட்கப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version