Home இலங்கை குற்றம் மியன்மாரிலிருந்து நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள்

மியன்மாரிலிருந்து நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள்

0

மியன்மாரில் (Myanmar) சைபர் மோசடி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள எட்டு இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த எட்டுப் பேரும் நேற்று (18.04.2024) பாதுகாப்பான முறையில் கட்டுநாயக்க விமான நிலையம் (Bandaranaike Airport) ஊடாக நாடு திரும்பியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஈரானின் பாரிய இராணுவ தளம் , அணு மின்னிலையம் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்

சைபர் மோசடி முகாம்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 100 பேர் மியன்மாரின் எல்லைப்புறப் பகுதியில் சைபர் மோசடி முகாம்களில் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் சிலர் பெரும் பணம் கொடுத்து அங்கிருந்து தப்பி வந்துள்ளனர்.

இந்நிலையில் மியன்மார் அரச, இராணுவ ஒத்துழைப்புடன் அண்மையில் எட்டுப் பேர் மீட்கப்பட்டு, தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் 2 மணிக்கு பின் இடியுடன் கூடிய கனமழை – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் : ஜனாதிபதி ரணில் உறுதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version