Home இலங்கை குற்றம் ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றப்பட்ட இலங்கையர்கள்

ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றப்பட்ட இலங்கையர்கள்

0

ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றிய பண மோசடி செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தாலி மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பாந்தோட்டை, சமரகோன்வெவ பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத்தினருடன் தலைமறைவு

அம்பாந்தோட்டை, வீரகெட்டிய, ஹுங்கம, அம்பலாந்தோட்டை, சூரியவெவ மற்றும் திஸ்ஸமஹாராமை ஆகிய பிரதேசங்களில் உள்ள பல்வேறு நபர்களிடம் பணம் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தலைமறைவாகி இருந்துள்ளார்.

பொலிஸாரிடம் முறைப்பாடுகள்

பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பில் அம்பாந்தோட்டை தலைமையக பொலிஸாரிடம் முறைப்பாடுகள் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் அம்பாந்தோட்டை, சமரகோன்வெவ பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பாந்தோட்டை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version