Home இலங்கை சமூகம் கண்டியில் ஸ்ரீ தலதா வழிபாடு விழாவுக்காக சிறப்பு அடையாள அட்டை!

கண்டியில் ஸ்ரீ தலதா வழிபாடு விழாவுக்காக சிறப்பு அடையாள அட்டை!

0

கண்டியில் ‘ஸ்ரீ தலதா வழிபாடு’ விழாவிற்காக கூடியிருக்கும் பெருந்திரளான
மக்களை நிர்வகிக்க, நேற்று முதல் சிறப்பு அடையாள அட்டை முறையை பொலிஸார்
அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த நிகழ்வில் சுமார் 400,000 பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்
என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சூழ்நிலை

இது தொடர்பில் ஊடக சந்திப்பில் பேசிய மத்திய மாகாண மூத்த பொலிஸ் அதிபர் லலித்
பத்திநாயக்க, வரிசைகள் மிக நீளமாக இருப்பதால், ஒரு நாளைக்கு 100,000 பேரை
அனுமதித்தாலும் தற்போதைய எண்ணிக்கையை குறைக்க, குறைந்தது மூன்று நாட்கள்
செல்லும் என்று தெரிவித்துள்ளார்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை காரணமாக, இராணுவம்
அழைக்கப்பட்டுள்ளது.

எனவே தான் அடுத்த இரண்டு நாட்களுக்கு கண்டிக்கு பயணிக்க வேண்டாம் என்று
அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், வரிசையில் இருந்த ஒருவர், நேற்று மாரடைப்பு காரணமாக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காலமானார்.

NO COMMENTS

Exit mobile version