Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் சிறீதரன் எம்.பி கலந்துரையாடல்!

உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் சிறீதரன் எம்.பி கலந்துரையாடல்!

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்
சிறீதரன் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த கலலந்துரையாடலானது நேற்று(29) யாழ். மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, நாடாளுமன்றில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்
திட்டத்திற்கான பிரேரணைகள், விவாதங்களின் போது உள்ளூராட்சி மன்றங்களின்
செயற்பாடுகள், விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

சந்திப்புக்கள்

தவிசாளர்களினால் ஆரோக்கியமான கருத்துக்களை தெரிவித்ததுடன் ஒவ்வொரு
விடயங்களையும் தனித்தனியாக ஆராய்ந்து உரிய விடயங்களை கேட்டறிந்து கொண்டனர்.

அத்துடன், எதிர்கால நடவடிக்கைக்கான விடயங்கள் தொடர்பாகவும் ஒவ்வொரு பிரதேச சபைகளின்
தலைவர்களிடமிருந்தும் விபரங்களை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மிகவும்
பயனுள்ளதாகவும், ஆரோக்கியமான கலந்துரையாடல்களாகவும் அமைந்துள்ளது எனக்
குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் இவ்வாறான சந்திப்புக்கள், கலந்துரையாடல்களை மேற்கொண்டு
உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகளையும் எமது செயற்பாடுகளையும் வெற்றிகரமாக
முன்னெடுக்க உதவியாக இது அமையும், என சிறீதரன் தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version