Home இலங்கை சமூகம் தென்னாபிரிக்கத் தூதுவரை சந்தித்தார் சிறீதரன் எம்பி !

தென்னாபிரிக்கத் தூதுவரை சந்தித்தார் சிறீதரன் எம்பி !

0

இலங்கைக்கான (Sri Lanka) தென்னாபிரிக்கத் (South Africa) தூதுவர் சாண்டில் எட்வின் ஷால்க் (Sandhill Edwin Schalk), துணைத் தூதுவர் றெனி எவர்சன் வர்ணி (Renee Everson Varney) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sridharan) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது நேற்றையதினம் (21) கொழும்பிலுள்ள (Colombo) தென்னாபிரிக்கத் தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் போது, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்மக்களின் நிலைப்பாடு மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளர் குறித்த சாதகத் தன்மைகள் குறித்தும், ஈழத்தமிழர்கள் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மனித உரிமை

இதன்போது, காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் (ICC) வழக்குத் தாக்கல் செய்துள்ள தென்னாபிரிக்கா, ஈழத்தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கும் சர்வதேச நீதியைப் பெற்றுத்தர முயற்சிக்க வேண்டும் என சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரிலும் இந்த விடயம் சார்ந்து தங்களின் கரிசனையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சிறீதரன், தென்னாபிரிக்கத் தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version