Home இலங்கை அரசியல் வடக்கு கிழக்கின் தொல்பொருள் சின்னங்கள் குறித்து சிறீதரன் எம்.பியின் உறுதி

வடக்கு கிழக்கின் தொல்பொருள் சின்னங்கள் குறித்து சிறீதரன் எம்.பியின் உறுதி

0

வடக்கு கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை
எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ். நல்லூர் மந்திரி மனையை தொல்பொருள் திணைக்கள
அதிகாரிகளுடன் சென்று இன்றையதினம்(18.09.2025) பார்வையிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“வடக்கு கிழக்கு
மக்களுடைய பூர்வீக அடையாளங்களை நிலை நிறுத்துகின்ற மிக முக்கியமாக மந்திரிமினையின் ஒரு பகுதி நேற்றையதினம் மழை காரணமாக இடிந்து வீழ்ந்தது. 

பூர்வீக அடையாளம்

அந்தப் பகுதியை பார்வையிட இன்று(18) காலை வந்திருந்தோம். இந்த மந்திரிமனை தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையான இடம். இதனை புணரமைத்து பாதுகாக்கப்பட வேண்டிய பல முயற்சிகள் எடுத்த
போதும் ஒரு சில தனி நபர்களின் நீதிமன்ற வழக்குகள் காரணமாக இழுபறி நிலையிலே
காணப்பட்டது. 

எனினும், தற்போது ஏற்பட்டுள்ள இந்த அவசர நிலை இந்தக் கட்டடத்தை புணரமைத்து இந்த தொல்பொருள் அடையாளத்தை எங்களுடைய பூர்வீக அடையாளமாக நிலை
நிறுத்துவதற்குரிய முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கின்றது. 

அதனடிப்படையில், இன்று யாழ்ப்பாண நல்லூர் பகுதியில் உள்ள மந்திரி மனையை கிழாச்சி யாழ்ப்பாணம் மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் சென்று
பார்வையிட்டு அதற்குரிய ஆலோசனைகளை பெற்றுள்ளேன். இந்த மந்திரி மனையை
பாதுகாப்பது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்குரிய முயற்சிகளை
மேற்கொள்ள உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version