Home இலங்கை அரசியல் சட்டவிரோதமாக நிறுவப்பட்ட புத்தர் சிலை – சிறீதரன் எம்.பி கள விஜயம்

சட்டவிரோதமாக நிறுவப்பட்ட புத்தர் சிலை – சிறீதரன் எம்.பி கள விஜயம்

0

Courtesy: NICKEY THOMSON

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) திருகோணமலையில் சட்டவிரோதமாக நிறுவப்பட்ட புத்தர் சிலை அமைந்துள்ள இடத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

தமிழர் தலைநகரான திருகோணமலையில்
அண்மைக்காலத்தில் வலுக்கட்டாயமாக செயல்பட்ட பெளத்த பிக்குகளது அடாவடித்தனமான
ஆக்கிரமிப்பானது பெளத்த பிக்குகளால் தமிழர் நிலங்களை அபகரிக்க கையாளப்படும்
யுக்தியாக பார்க்க வேண்டும் என சிறீதரன் தெரிவித்துள்ளார்.

சிலை அமைந்துள்ள காணி 

இதனை தாம் வன்மையாக கண்டிப்பதுடன் நடைபெறும் சட்ட நடவடிக்கைகளை தாம்
கண்காணித்து வருவதுடன் அது தொடர்பிலான கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான அழுத்தங்களை பிரயோகிக்கவும் தாம்
தயாராக இருப்பதாகவும் அவர் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த சிலை அமைந்துள்ள காணி மற்றும் அந்த இடம் தொடர்பான விடயங்களை தொண்டர்களிடம் கேட்டு அறிந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version