Home உலகம் லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய 23ஆம் ஆண்டு மகோற்சவப் பெருவிழா

லண்டன் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய 23ஆம் ஆண்டு மகோற்சவப் பெருவிழா

0

லண்டன் (London) – வோல்தம்ஸ்ரோவில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய 23ஆவது ஆண்டு மகோற்சவம் இவ்வருடமும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இன்று (19.08.2024) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவப் பெருவிழா எதிர்வரும் 03.09.3034 அன்று பூங்காவனத்துடன் நிறைவுபெறும்.

ஸ்ரீ கற்பக விநாயகரின் தேர்த்திருவிழா எதிர்வரும் 01.09.2024 அன்றும் தீர்த்தத்திருவிழா 02.09.2024 அன்றும் நடைபெறவுள்ளது.

மகோற்சவப் பெருவிழாவில் கொடியேற்ற தினமான இன்றும் (19) நாளை (20) மற்றும் நாளை மறுதினமும் (21) புலவர் இராமலிங்கத்தின் சமய சொற்பொழிவு இடம்பெறும்.

அத்துடன் தேர்த்திருவிழா நாளான எதிர்வரும் முதலாம் திகதி (01.09.2024) சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் இம் மகோற்சவ திருவிழாவில் நாதஸ்வர வித்துவான்களான ஈழத்ததைச் சேர்ந்த கே. பஞ்சமூர்த்தி குமரன், பாலமுருகன், நாகதீபன் ஆகியோரின் இசைக்கச்சேரியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Source: https://ibctamil.com/article/srikarphaha-vinayagar-temple-23rd-annual-mahotsava-1724066607

NO COMMENTS

Exit mobile version