Home இலங்கை அரசியல் அரசியல் ஆட்சி மாற்றத்தில் திண்டாடும் தமிழர் வாழ்வாதாரம்

அரசியல் ஆட்சி மாற்றத்தில் திண்டாடும் தமிழர் வாழ்வாதாரம்

0

நடைபெறப்போகும் ஆட்சி மாற்றத்தினால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு பொருளாதார மாற்றமும் நிகழப்போவதில்லையென யாழ்  (Jaffna) மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் (V. Manivannan) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இனவாதம் அடிப்படையில்தான் தமிழ் மக்களுக்கு தீர்வு தரப்படவில்லையென்று பார்த்தால் பொருளாதார ரீதியிலும் எந்தவொரு தீர்வும் வழங்கப்படவில்லை.

பொருளாதார மாற்றம்

பலாலியிலிருந்து சென்னைக்கான (Chennai) விமானத்தை தர கூட யாரும் தயாராக இல்லை அத்தோடு காங்கேசன்துறை (Kankesanturai) துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவும் தயாராக இல்லை.

உண்மையான பொருளாதார மாற்றம் வடக்கு மற்றும் கிழக்கிற்கு வேண்டுமாக இருந்தால் எமக்கான அதிகாரம் எங்கள் கையில் கிடைக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.  

Source: https://ibctamil.com/article/srilanka-2024-president-election-updates-1726295695

NO COMMENTS

Exit mobile version