Home இலங்கை சமூகம் நாடாளுமன்ற தேர்தலையொட்டி விசேட போக்குவரத்து சேவை : வெளியான அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி விசேட போக்குவரத்து சேவை : வெளியான அறிவிப்பு

0

நாடாளுமன்ற தேர்தலுக்க வாக்களிக்க கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து சேவையானது இன்று (12) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நாளையும் (13) இலங்கை போக்குவரத்து சபை விசேட பேருந்து சேவையை முன்னெடுக்கும் என அதன் தலைவர் ரமால் சிறிவர்தன (Ramal Siriwardena) தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து சேவை

தேர்தலுக்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்கு தினசரி தொடருந்து பயணங்களுக்கு கூடுதலாக, கூடுதல் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் துணைப் பொது மேலாளர் என்.ஜே. இடிபொல (N. J. Idipola) அறிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தேர்தல் சேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதால் நாளை (13) வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன (Kemunu Wijeratna) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version