Home இலங்கை சமூகம் உத்தேச மின் கட்டணத்திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

உத்தேச மின் கட்டணத்திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

0

2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான மக்களின் வாய்மூல கருத்துக் கோரல்கள் கோரப்படவுள்ளன.

இதற்கமைய, நாளை (09) இடம்பெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எழுத்து மூலக்கருத்து கோரல்கள் 

நாளை முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 4.30 வரை பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இந்தக் கருத்துக் கோரல்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான எழுத்து மூலக் கருத்துக் கோரல்கள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/srilanka-electricity-bill-1720455486

NO COMMENTS

Exit mobile version