Home இலங்கை சமூகம் குறைக்கப்பட்டது எரிபொருளின் விலை : வெளியானது புதிய அறிவிப்பு

குறைக்கப்பட்டது எரிபொருளின் விலை : வெளியானது புதிய அறிவிப்பு

0

இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விலை விபரம் 

ஒக்டேன் 95 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 41 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 379 ரூபா ஆகும்.

ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 355 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.

இரண்டாம் இணைப்பு

எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான தீர்மானங்கள் இன்று இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் எரிபொருள் சூத்திரத்தின் அடிப்படையில் மாதாந்த எரிபொருள் திருத்தம் இடம்பெறும் எனவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சரியான முறையைப் பின்பற்றாத காரணத்தினால்
நாளை 5 வீதத்தால் பேருந்து கட்டணத்தை குறைக்கமுடியாதென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். 

முதலாம் இணைப்பு

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலையை குறைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, எரிபொருள் விலை திருத்தம் இன்று (30ஆம் திகதி) இரவு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இம்முறை எரிபொருள் விலையில் பாரிய திருத்தம் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றம்

கடந்த ஒரு மாதத்திற்குள் உலக சந்தையில் எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்ற அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 31ஆம் திகதி இறுதியாக எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version