Home இலங்கை சமூகம் அரச சேவைகள் ஸ்தம்பிதமடையும் அபாயம்

அரச சேவைகள் ஸ்தம்பிதமடையும் அபாயம்

0

அரச சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் 200ற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08) மற்றும் நாளை (09) சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தபால், நில அளவையாளர், கிராம சேவை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரச ஊழியர்கள் இன்று சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

சுகாதார பணிகள் தடையின்றி இடம்பெறும்

அத்துடன், அதிபர், ஆசிரியர் சங்கங்கள்
இன்று பணிக்கு சமூகமளித்துள்ள போதிலும், நாளை சுகவீன விடுமுறையை அறிவிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார சேவை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் தாதியர் சங்கம் என்பன தெரிவித்துள்ளன.
. அதன்படி, சுகாதார பணிகள் தடையின்றி இன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அரச சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

NO COMMENTS

Exit mobile version