Home இலங்கை அரசியல் கள்ள வாக்களிப்பு : லோக்கல் எலெக்சனில் லோக்கல் சிஸ்ரம்

கள்ள வாக்களிப்பு : லோக்கல் எலெக்சனில் லோக்கல் சிஸ்ரம்

0

2022 இலும் மற்றும் 2023 இலும் நடக்கும் நடக்காது என இழுபறியில் காணப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் இன்று (06) நாடளாவிய ரீதியில் நடைபெற்று முடிந்துள்ளது.

இலங்கையில் 2021 ஆம் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெறுக்கடி மற்றும் அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிற்கு எதிராக நடைபெற்ற அரகலய போராட்டங்கள் என்பவற்றால் அப்போது நடைபெற இருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து, ஜனாதிபதியாக பொருப்பேற்ற ரணில் விக்ரமசிங்க, 2023 இல் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தி இருக்க வேண்டிய நிலை காணப்பட்டது.

இருப்பினும், நிதி நெருக்கடி காரணமாக மறுபடியும் தேர்தல் கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இதன்பின்பு, 2023 மார்ச் முதல் இலங்கையில் ஒரே ஒரு உள்ளூராட்சி சபையை விட மற்ற அனைத்து உள்ளூராட்சி சபைகளும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இல்லாமல் ஆணையாளர்களால் செயற்பட்டது.

இந்தநிலையில், இன்று (06) முதல் குறித்த நிலை மாற்றப்பட்டு இனி மக்கள் பிரதிநிதிகளினால் உள்ளூராட்சி சபை மாற்றமடையவுள்ளது.

இன்றைய வாக்களிப்பானது, 2012, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு ஆகிய மூன்று ஆண்டுகளில் திருத்தப்பட்ட இலங்கையின் தேர்தல் சட்டங்களின் அடிப்படையில், அதாவது பிரதிநிதித்துவம் மற்றும் விகிதாசார முறைகளினால் பிரதிநிதிகளை தீர்மானிக்கும் முறையில் இடம்பெறுகின்றது.

இன்னும் தெளிவாக குறிப்பிட போனால் கலப்பு உறுப்பினர் விகிதார பிரதிநிதித்துவம் சார்ந்த தேர்தல் வாக்களிப்பு இது, அதாவது இலங்கை தேர்தல் வரலாற்றில் அதிக வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்கு கொள்ள வேண்டிய தேர்தல் களம் இது.

இருப்பினும், இந்த தேர்தலை மக்கள் பயன்படுத்தி கொண்டார்களா என்பது கேள்விக்குறிய விடயமாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்தி வீச்சு நிகழச்சி,         

https://www.youtube.com/embed/Mj97KVroJf0

NO COMMENTS

Exit mobile version