Home இலங்கை சமூகம் கடவுச்சீட்டிற்காக நள்ளிரவு முதல் காத்திருக்கும் மக்கள்

கடவுச்சீட்டிற்காக நள்ளிரவு முதல் காத்திருக்கும் மக்கள்

0

அண்மைய நாட்களாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு முன்பாக மக்கள் மீண்டும் நீண்ட வரிசையில் நின்று கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாலை முதலே நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதாகவும், பலர் அதிகாலை நான்கு மணிக்கே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக வந்து வரிசையில் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் லங்காசிறி ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த மக்கள், அதிக தூரத்தில் இருந்து வந்து இரவில் இருந்து காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் இதனால் கடவுச்சீட்டு பெறுவதற்கான வாய்ப்பை மாவட்ட ரீதியில் அரசாங்கம் ஒழுங்கமைத்து தந்தால் உதவியாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, ஆயிரக்கணக்கனோர் கடவுச்சீட்டு பெறுவதற்காக வருகைதருகின்ற நிலையில், இவர்கள் அனைவரும் வெளிநாடுகளுக்கு செல்கின்றார்களா என்பது தொடர்பில் சந்தேகம் எழுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மக்கள் தெரிவித்த கருத்துக்கள், வரிசையில் காத்திருப்பதன் விரிவான காரணம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பிலான மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள கீழுள்ள காணொளியை பார்வையிடுங்கள்,

https://www.youtube.com/embed/XSfNg3-ofZ0

NO COMMENTS

Exit mobile version