Home இலங்கை சமூகம் தபால் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

தபால் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

0

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொதிகள் குறித்து தபால் திணைக்களம் எவ்வித குறுஞ்செய்திகளையும் அனுப்பி வைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தபால் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

போலி இணையதளமொன்றின் ஊடாகவும் குறுஞ்செய்தி ஊடாகவும் பொதிகள் குறித்து பொதுமக்களிடம் அறிவித்து பணம் பறிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி அட்டை விபரங்கள்

தபால் திணைக்களம் திணைக்கள அதிகாரபூர்வ இணைய தளத்தைப் போன்று போலி இணைய தளமொன்று உருவாக்கப்பட்டு, நபர்களின் தனிப்பட்ட விபரங்கள் திரட்டப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தபால் பொதிகள் குறித்து அறிவிக்கும் போது வங்கி அட்டை விபரங்களை வழங்கத் தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தபால் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு இவ்வாறான சந்தர்ப்பங்களில் உண்மையை அறிந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு 0112542104, 0112 334728, 0112335978, 0112687229, 0112330072 என்ற எண்களின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரான் தொடர்பில் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட பலத்த அச்சம்! அடுத்தடுத்து காத்திருக்கும் ஆபத்துகள்

பிரபல அழகியிடம் சிக்கிய கோட்டபாயவின் அதிசொகுசு வாகனம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version