Home இலங்கை பொருளாதாரம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை இழக்கும் நிலையில் இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை இழக்கும் நிலையில் இலங்கை

0

12 பில்லியனுக்கும் அதிகமான கடனை மறுசீரமைப்பதற்கான சர்வதேச பத்திரதாரர்களின்
முன்மொழிவை இலங்கை ஏற்றுக்கொள்ளாமையானது, சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) நிதி ஆதரவை
இழக்கக்கூடும் என சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

முடிந்தவரை விரைவில் மேலதிக பேச்சுவார்த்தைகளை நடத்த நம்புவதாக இலங்கை அரசாங்கம் கூரியிருந்தாலும் தொடர் கலந்துரையாடல்களை பத்திரக்கார்களின்; வழிகாட்டல்
குழு நிராகரித்துள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் சில வாரங்களில் சமரசம் இல்லையெனில், சர்வதேச நாணய
நிதியத்தின் அடுத்த தவணைக்கான ஆதரவு பணமும் தாமதமாகலாம் என
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேவைப்படும் உடன்படிக்கை

இலங்கை ஏற்கனவே அதன் முக்கிய அரசாங்க கடன் வழங்குநர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை
மேற்கொண்டுள்ளது.

ஆனால் அதன் 2.9 பில்லியன் டொலர் திட்டத்தின் அடுத்த 337 மில்லியன் டொலர்கள்
தவணைக்காக சர்வதேச நாணய நிதியத்தின்; ஒப்புதலைப் பெறுவதற்கு சர்வதேச
பத்திரப்பதிவுதாரர்களுடன் உடன்படிக்கை தேவைப்படுகிறது.

இந்தநிலையி;ல் பத்திரதாரர்களின் முன்மொழிவுகள் “அடிப்படை அளவுருக்கள்” சர்வதேச
நாணய நிதிய திட்டத்துடன்; பொருந்தவில்லை என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

மூவின மக்களையும் சோகத்தில் ஆழ்த்திய சிங்கள அரசியல்வாதி : மரணத்தை முன்கூட்டியே அறிந்த பாலித்த

ஆசிரியர்களின் வெளிநாட்டு பயண விடுமுறை அனுமதி நடைமுறையில் மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version