Home இலங்கை சமூகம் நாளுக்கு நாள் உயர்வடையும் பலி எண்ணிக்கை! பலர் காணாமல்போயுள்ளதாக தகவல்

நாளுக்கு நாள் உயர்வடையும் பலி எண்ணிக்கை! பலர் காணாமல்போயுள்ளதாக தகவல்

0

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 627 ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

இன்று (07) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,190 பேர் இதுவரை காணவில்லையெனவும், 611,530 குடும்பங்களைச் சேர்ந்த 2,179,138 பேர் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழப்பு எண்ணிக்கை

இதன்படி, பேரிடர் மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 232 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் 89 பேரும், பதுளை மாவட்டத்தில் 90 பேரும், குருநாகலில் 61 பேரும், கேகாலை மாவட்டத்தில் 32 பேரும், புத்தளத்தில் 35 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 28 பேரும் உயிரிழந்துள்ளனர்.

27,663 குடும்பங்களைச் சேர்ந்த 89,857 நபர்கள் இன்னும் தங்குமிடங்களில் தங்கியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version