Home இலங்கை இந்திய சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பரம்

இந்திய சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பரம்

0

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines)  விளம்பரத்தில் இராமாயணம் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளமையானது, இந்திய மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவமானது தனது சேவையை மேம்படுத்தும் விதமாக 5 நிமிட விளம்பர காணொளியொன்றை வெளியிட்டுள்ளது.

ஒரு பாட்டி தனது பேரனுக்கு குழந்தைகள் புத்தகத்திலிருந்து இராமாயணக் கதையை கூறுவது போன்று காணொளி, வடிமைக்கப்பட்டுள்ளது.

அந்த காணொளியில், சீதையை கடத்திச் சென்ற மன்னன் இராவணன் அவளை எங்கே அழைத்துச் சென்றான் என்று அந்த குழந்தை கேட்க, இராமாயணத்தில் உள்ள அனைத்து இடங்களும் உண்மையானவை என்று அந்த பாட்டி தனது பேரனிடம் விவரிக்கிறாள்.

விளம்பர காணொளி

இராவணன் குகை, சீதா அம்மன் கோவில், இராமர் பாலம் உள்ளிட்ட இடங்களை பற்றி தனது பேரனிடம் பாட்டி விவரிக்க, “இராமர் பாலம் இப்போதும் இருக்கிறதா?” என ஒரு குழந்தை கேட்கிறார். அதற்கு “ஆமாம் அதை இன்றும் பார்க்கலாம்” என பாட்டி பதிலளிக்கும் விதமாக காணொளி உள்ளது.

மேலும் இராமாயணத்தில் குறிப்பிடப்படும் இலங்கையின் இடங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் இந்த விளம்பர காணொளி உருவாகியுள்ளது.

வட இந்தியாவில் உள்ள இந்து மக்களிடையே இந்த விளம்பர காணொளி வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version