Home இலங்கை குற்றம் ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கலை விளக்க மறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிஷாந்த, விமானங்கள் கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நடந்து வரும் விசாரணை சம்பந்தமாக, ஊழல் அல்லது மோசடிகள் குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரவு

இந்நிலையில், அவரை கொழும்பு முதன்மை நீதிவான் தனுஜா லக்மலி ஜயதுங்கா முன்னிலையில் முன்னிலைப்படுத்திய நீதிமன்றம், எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.  

நிஷாந்த விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version