சிறிலங்கன் எயார்லைன்ஸில் இணையும் புதிய எயார்பஸ் A330-200 விமானம் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இந்த விமானம் இன்று (04) காலை பிரான்சின் பாரிஸிலிருந்து நாட்டுக்கு வந்துள்ளது.
விமான நிலையத்தில் தரையிறங்க முன்னர், கொழும்பு கடற்கரைக்கு மேலாக குறித்த விமானம் மிகவும் தாழ்வாக பறந்து செல்லும் காட்சியை பலரும் பார்வையிட்டுள்ளனர்.
குவிந்திருந்த ஏராளமான மக்கள்
அதன்போது, விமானம் வெறும் 1,500 அடி உயரத்தில் கொழும்பு துறைமுக நகரத்தின் தெற்கு முனையிலிருந்து மொரட்டுவாவிற்கு பறந்தது.
இதன்படி, இலங்கையை உலகத்துடன் இணைக்கும் நீண்ட மற்றும் குறுகிய தூர பயணங்களுக்காக சிறிலங்கன் எயார்லைன்ஸூடன் இணையும் இந்த புதிய விமானத்தின் முதல் வருகையைக் காண காலி முகத்திடலில் ஏராளமானோர் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
