Home இலங்கை சமூகம் இஸரேல் – ஈரான் யுத்தத்தில் தாக்குதலுக்குள்ளான இலங்கையர்கள்

இஸரேல் – ஈரான் யுத்தத்தில் தாக்குதலுக்குள்ளான இலங்கையர்கள்

0

மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ பதற்றம் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை மோசமாக உள்ளதாக  வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

வலுக்கும் இஸ்ரேல் – ஈரான் மோதல் நிலையை கருத்தில்கொண்டு ஈரானின் தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகத்தை காலி செய்ய  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

தூதரகத்துடன் தொடர்புடைய பணிகள் 

“தூதரகத்துடன் தொடர்புடைய பணிகள் வேறு இடத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ நிலைமை காரணமாக நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை மோசமாக உள்ளது.

காயமடைந்த இலங்கையர்கள் அனைவரும் இஸ்ரேலில் பணிபுரிபவர்கள். அவர்கள் தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்க தூதரகம் தலையிட்டு வருகின்றது.

இஸ்ரேலில் வேலைக்கு ஆட்களை அனுப்புவதை நாங்கள் தற்காலிகமாக நிறுத்திவிட்டோம்.

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

விடுப்பில் இருப்பவர்கள் திரும்பி வர வாய்ப்பில்லை. விசா காலத்தை நீட்டிக்குமாறு நாங்கள் கோரியுள்ளோம்.

அதைச் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த நேரத்தில் இஸ்ரேலுக்குப் பயணம் செய்வதும் ஆபத்தானது.

இஸ்ரேலில் பணிபுரியும் மக்களை இந்த நாட்டிற்கு அழைத்து வர விமானம் அனுப்புவது கடினமான பணி.

இருப்பினும், தொழில்நுட்ப ரீதியில் தூதர்களுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.” என்றார்.

NO COMMENTS

Exit mobile version