Home இலங்கை சமூகம் கட்டார் மற்றும் குவைத்துக்கான சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானங்கள் : வெளியான தகவல்

கட்டார் மற்றும் குவைத்துக்கான சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமானங்கள் : வெளியான தகவல்

0

கட்டார் (qatar)மற்றும் குவைத்துக்கான(kuwait) சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் கொழும்புக்கு(colombo) திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக இவ்வாறு விமானங்கள் மீள திரும்பியுள்ளன.

விமானங்கள் ஓமானில் தரையிறங்கி, நாடு திரும்புவதற்கு முன்பு எரிபொருள் நிரப்பப்பட்டதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டுள்ள வெளிநாட்டு பயணிகள்

விமானத்தில் இருந்த வெளிநாட்டு பயணிகள் ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இலங்கை பயணிகளை அவர்களின் வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

 தற்போதைய பாதுகாப்பு நிலைமையை மதிப்பாய்வு செய்த பிறகு விமானங்கள் மீண்டும் தொடங்கும் நேரம் முடிவு செய்யப்படும்.

ஏனைய நாடுகளில் தரையிறங்கிய சிறிலங்கன் எயார் லைன்ஸ்

 இதற்கிடையில், துபாய், அபுதாபி மற்றும் ரியாத் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் சிறிய தாமதங்களுக்குப் பிறகு அந்த நாடுகளில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

 
மற்ற விமானங்கள் வழக்கம் போல் இயங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version