ஆசியாவின் பெரிய நாடான இந்தியாவும் இலங்கையின் மகாவம்சத்தைப் பயன்படுத்தியே தங்களில் வரலாற்றை நிறுவியதாக கொட்டபிட்டிய ராகுல தேரர் தெரிவித்துள்ளார்.
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடத்திய போதனையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அது தொடர்பில் மேலும் பேசுகையில்,
“நாம் பொருளாதார கஷ்டத்தில் தான் இருக்கிறோம். எமக்கு நிவாரணம் தேவைதான். அதற்காக எமது இறைமைக்குப் பங்கம் ஏற்படுத்த முடியாது. உலகின் சர்வாதிகார சக்திகளின் கை நகர்த்தலுக்கு அமையச் செயற்பட முடியாது.
கல்வி சீர்திருத்தம்
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இலங்கை பௌத்த நாடு என்ற தன்மைக்குப் பங்கம் ஏற்படுத்த முனையக் கூடாது. இலங்கை பௌத்த பிக்குகளின் வாயடைக்கப்பட்டுள்ளது. இன்று யாரும் பேசுவதில்லை. ஏன் என்று தெரியவில்லை.
முன்னர் சிறு காரணத்துக்கும் செய்தியாளர் மாநாடுகள் நடத்துவோர் எங்கே? அந்த பேச்சாளர்கள் எங்குப் போனார்கள்? நீங்கள் ஆயத்தமாக வேண்டிய காலம் நெருங்கிவிட்டது.
விழிப்புணர்வு கொள்ளுங்கள். எமது நாட்டை காப்பற்ற முன்வாருங்கள். எமது கல்வி சீர்திருத்தத்தில் வரலாறு பாடம் விருப்பத்திற்குரிய பாடமாக்கப்பட்டுள்ளது. மகாவம்சம்-துவம்சம்-தீபவம்சம் இவை தான் எமது வரலாறுகள்.
அரகலய போராட்டத்தில் பௌத்த வாதம் வலுவிழக்கப்பட்டு விட்டது என்று கூறினர். ஆனால், அதற்கான வேலைகள் நடப்பதாக இப்போது தான் தெரிகிறது.
வரலாறு என்பது அரசர்கள் மற்றும் பௌத்த பிக்குகள் நாட்டுக்குச் செய்த பெரும் பாக்கியங்களாகும். இவை அறிந்து கொள்ளாமல் எவ்வாறு நாட்டில் வாழமுடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
