Home இலங்கை சமூகம் 100 வருடங்களுக்கு பின்னர் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பயிலும் இலங்கை தேரர்

100 வருடங்களுக்கு பின்னர் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பயிலும் இலங்கை தேரர்

0

Courtesy: Sivaa Mayuri

இங்கிலாந்தின் (England) ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் St Cross College, 105 வருடங்களின் பின்னர் பல்கலைக்கழகத்தில் கற்கும், முதல் இலங்கை பௌத்த பிக்கு ஒருவரை வரவேற்பதாக அறிவித்துள்ளது.

வடிகல சமிதரதன தேரரே, 105 வருடங்களுக்கு பின்னர், ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பௌத்த கற்கைகளில் எம்ஃபில் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

மாறுபட்ட கல்வி சமூகம் 

புனித க்ரோஸ் கல்லூரி இங்கிலாந்தில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான கல்லூரிகளில் ஒன்றாகும், மாறுபட்ட கல்வி சமூகத்திற்கு பெயர் பெற்ற கல்லூரியாகும்.

முன்னதாக ஒக்ஸ்போர்டில், சூரியகொட சுமங்கல என்ற தேரரே இறுதியாக கல்வி கற்றவராவார். அவர் 1919 இல் குறித்த கல்லூரியில் கல்வி கற்றுத் தேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version