Home இலங்கை அரசியல் புத்தரை வைத்து ஆக்கிரமிப்பு: பேரிடருக்கு மத்தியில் சிறிநேசன் ஆதங்கம்!

புத்தரை வைத்து ஆக்கிரமிப்பு: பேரிடருக்கு மத்தியில் சிறிநேசன் ஆதங்கம்!

0

அன்புருவான புத்தரின் சிலையை, ஆக்கிரமிப்பின் அடிப்படைக் குறியீடாக மாற்ற வேண்டாம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலைக் கடற்கரையின் ஒரு பக்கமாக நிறுவப்பட்ட புத்தர் சிலை அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அன்புமயமான புத்தரை இலங்கையில் ஆக்கிரமிப்பின் அடையாளமாகக் காட்டுவதற்கு, சில அடிப்படைவாத பௌத்தர்கள் மற்றும் அவர்களது அரசியல்வாதிகள் மற்றும் அடாவடியர்கள் முற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பௌத்த குருமார்கள்

மேலும் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில், “இதனை முதலில் தடுக்க முயன்ற காவல்துறையினர் பின்னர், பௌத்த குருமார்களின் மேலாதிக்கத்துக்கு அடிபணிந்து விட்டார்கள் என்ற கருத்து வெளிவந்துள்ளது.

அமைதியாக வாழும் தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் மத்தியில் அடிப்படைவாதத்தை மீண்டும் விதைப்பதற்கு, பேரினவாதிகள் துடிக்கின்றனர்.

இதன் மூலம் மக்களைக் குழப்பி மீண்டும் ஊழல் மோசடிப் பேரினவாதிகளை மீண்டும் ஆட்சி மேடைக்குக் கொண்டு வர விரும்புகின்றனர்.

இவ்விடயத்தில் இப்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதியாக செயற்பட வேண்டும்.

மேலும்,தொல்லியல் திணைக்களமானது தொல்லியல் என்றால், பௌத்த கலாசாரம் என்ற மனோநிலையில் செயல்படக்கூடாது.

இலங்கையில் நேர்நெறியில் வாழக்கூடியவர்களையும் போர் வெறியர்களாக மாற்றும் பிக்குகள் சிலரும் உள்ளனர். இதுதான் நாட்டின் சாபக்கேடாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version