Home இலங்கை குற்றம் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது

பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது

0

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் சதீஸ் கமகே கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதிச்சலவை தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே கைது செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விசாரணை நடவடிக்கைகள்  

பொலிஸ் திணைக்களத்தின் கலாசார பிரிவின் பதில் பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே கடமையாற்றி வருகின்றார். 

இன்றைய தினம் கைது செய்யப்பட்ட சதீஸ் கமகேவிடம் தற்பொழுது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊழல் மோசடிகள் தொடர்பிலான சில குற்றச்சாட்டுக்களை மையமாகக் கொண்டு இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா

NO COMMENTS

Exit mobile version