Home இலங்கை கல்வி க.பொ.த சாதாரண தர பரீட்சையில் புனித மிக்கேல் கல்லூரி வரலாற்று சாதனை

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் புனித மிக்கேல் கல்லூரி வரலாற்று சாதனை

0

இந்த வருடம் நடைபெற்ற க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பரீட்சைக்கு தோற்றிய 214 மாணவர்களில், 207 (96.7%) மாணவர்கள் க.பொ.த உயர் தரத்திற்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

அதேபோல் வரலாற்றில் 43 (20.1%) மாணவர்கள் 9″A” சித்தியைப் பெற்று, கல்லூரிக்கு பெரும் புகழை ஈட்டித் தந்ததுள்ளதாக கூறப்படுகிறது.

உயர் தரத்திற்கு தகுதி 

அத்துடன் 24 மாணவர்கள் 8″A” சித்தியினையும் 19 மாணவர்கள் 7″A” சித்தியினையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளுக்கு வழிகாட்டிய பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Source: https://tamilwin.com/article/st-michael-collage-ol-exam-result-1727721843

NO COMMENTS

Exit mobile version