பூமிக்கு (Earth) அருகில் இயங்கும் சிறுகோள்களில் (Asteroid) மிக வேகமான சுழற்சியைக் கொண்டுள்ள சிறுகோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கடந்த ஜனவரி மாதம், 21 ஆம் திகதியன்று ஜெர்மனியின் (Germany) பெர்லினில் (Berlin )இந்த சிறுகோள்கள் எரிந்து வெடித்திருந்தது ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
2024 BX1 என பெயரிடப்பட்ட விண்வெளிப் பாறையானது பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த போது தீப்பற்ற ஆரம்பித்து பூமியை நெருங்கி வர வர அதன் சுழற்சி வேகம் அதிகரித்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சந்திரனில் யாரும் செல்லாத பகுதிக்கு சென்ற சீனா: மாதிரிகளை சேகரிக்கும் ரோபோ
வேகமாகச் சுழலும் சிறுகோள்
இந்த சிறுகோளின் வேகம் தொடர்பாக ஆய்வாளர்கள் கூறுகையில் இது மிகவும் அசாதாரணமானது எனவும், 31,000 mph (50,000 km/h) வேகத்தில் பயணித்த இந்த சிறுகோள், 2.6 வினாடிகளுக்கும் ஒருமுறை சுழன்று கொண்டிருந்ததாக கணித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, வேகமாகச் சுழலும் சிறுகோள் என்ற சாதனையை 2020 HS7 எனப் பெயரிடப்பட்ட சிறுகோள் பெற்றிருந்த நிலையில் அந்த சாதனையை இப்போது 2024 BX1 சிறுகோள் முறியடித்து வேகமாகச் சுழலும் சிறுகோளாக நிலைபெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
2020 HS7 என்ற சிறுகோளானது 2.99 வினாடிகள் சுழற்சியைக் காண்பித்த நிலையில் அதனை விட வேகமான சுழற்சியை 2024 BX1கொண்டுள்ளது.
விண்வெளியிலிருந்து பூமியை வந்தடைந்த செய்தி…!
புதிய நுட்பம்
அதுமாத்திரமன்றி, 2020 HS7 சிறுகோளானது 13 முதல் 24 அடி (4 முதல் 8 மீட்டர்) வரை விட்டம் கொண்டுள்ள நிலையில் இது 2024 BX1 ஐ விட சற்று பெரியதாக இருக்கிறது, இதன் காரணமாக 2024 BX1 இன் வேகம் அதிகமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
மேலும், சிறுகோள்களின் சுழற்சி வேகத்தைக் காட்சிப்படுத்துவதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய நுட்பத்தை உருவாக்கியுள்ளதாகவும், இதன் மூலமாக பூமியை நெருங்கும் சிறுகோள்களின் பிரகாசத்தை ஒற்றை படங்களில் பிரித்தெடுக்க முடியும் எனவும் அவற்றின் சுழற்சி வேகத்தை கணித்து ஏற்படவிருக்கும் விளைவுகளை எதிர்வுகூறமுடியும் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
பூமிக்கு அருகாமையில் பறக்கும் சிறுகோள்களின் சுழற்சி வேகத்தை அறிந்துகொள்வது, மனிதர்கள் மற்றும் பூமியின் உள்கட்டமைப்பிற்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்க பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் கிரகத்தில் வசிக்கவுள்ள மனிதர்கள் ஆனால் வீடு பூமியில்…பின்னணி இதுதான்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |