ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி திடீரென வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சூரிய ஒளி நேரடியாக படும் இடத்தில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிக வெப்பத்தால் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் வெப்பம்
எனவே, கடும் வெப்பம் நிலவும் காலப்பகுதியில் வெளியில் வாகனத்தை நிறுத்தி கைத்தொலைபேசியை உள்ளே வைத்து விட்டு வெளியேற வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் நாளைய தினம்(5)அதிக வெப்பமான காலநிலை நிலவும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
Source: https://ibctamil.com/article/extreme-heat-mobile-phone-exploded-in-car-1714838330
