சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிக்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி, மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் 17 வயதிற்குட்பட்ட கூடைப்பந்தாட்ட
அணியினர் நேற்று வெள்ளிக்கிழமை (24.10.2025)தாய்லாந்துக்கு பயணித்துள்ளனர்.
தாய்லாந்தில் ஒக்டோபர் 24 முதல் 27 வரை இலங்கை, பூட்டான், மாலைதீவு, தாய்லாந்து ஆகிய
4 நாடுகளைச் சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்டவர்கள் கொண்டமைந்த சர்வதேச
கூடைபந்தாட்ட போட்டி இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி
இந்த போட்டியில் இலங்கையில் இருந்து மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரி
அணியும் கொழும்பு ஆனந்தா கல்லூரி அணியும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளன.
இதனடிப்படையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு
சென் மைக்கல் கல்லூரி அணியினர் தாய்லாந்துக்கு நேற்று இரவு விமானத்தில்
புறப்பட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
