நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30ஆம் ஆண்டு
நினைவுதினம் புதன்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு
கூரப்பட்டது.
சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றன.
அஞ்சலி
அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூவி சுடரேற்றி
உயிரிழந்தவர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ்
தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து
தங்கியிருந்த மக்கள் மீது விமானப்படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக
13 குண்டுகளை வீசியதில் 135ற்கும் மேற்பட்டோர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நினைவேந்தலின்போது புலனாய்வாளர்களின் கெடுபிடிகள் அதிகமாக இருந்ததை
அவதானிக்க முடிந்தது.
