Home இலங்கை அரசியல் எலான் மஸ்கின் ஸ்டார்லிங் திட்டம் இடைநிறுத்தப்படவில்லை- அறிவித்த அரசாங்கம்

எலான் மஸ்கின் ஸ்டார்லிங் திட்டம் இடைநிறுத்தப்படவில்லை- அறிவித்த அரசாங்கம்

0

ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் இணைய சேவை திட்டம், இலங்கையில்
இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறும் செய்திகளை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை
ஆணையகம் மறுத்துள்ளது.

இந்த சேவை, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் செயல்பாடுகளைத் தொடங்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டத்தில் தாமதம் 

இந்த நிலையில், டேஷ்போர்ட் எனப்படும் ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பை
செயல்படுத்துவதால், இந்த திட்டத்தில் தாமதம் ஏற்பட்டதாக, ஆணையகத்தின்
இயக்குநர் பந்துல ஹேரத் கூறியுள்ளார்.

இதேவேளை, பயனர்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தை கண்காணிக்கவும் தேசிய
பாதுகாப்பை உறுதி செய்யவும் டேஷ்போர்ட் அமைப்பின் தேவை காரணமாக மட்டுமே இந்த
தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

 தேவையான அமைப்புகள் அமைக்கப்பட்டவுடன் ஸ்டார்லிங்கின் செயல்பாடுகள் தொடரும்
என்று ஹேரத் கூறியுள்ளார் .

NO COMMENTS

Exit mobile version