எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் உருவாக்கிய செயற்கைக்கோள் இணைய சேவை வழங்குநரான
ஸ்டார்லிங்க் சேவை தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைகள்
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, முறைப்பாடுகளை கையாளுதல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் வலையமைப்பில்
நிகழும்; குற்றங்களுக்கு எதிராக வழக்குத் தொடருதல் போன்றவை தொடர்பில்,
இலங்கைக்கு அணுகல் கிடைத்துள்ளது.
ஸ்டார்லிங்க் பாரம்பரிய செயற்கைக்கோள் சேவைகளை விட வேகமான இணைய வேகத்தையும்
குறைந்த தாமதத்தையும் வழங்குகிறது.
வன்பொருள் கட்டணம்
அத்துடன், தரைவழி உள்கட்டமைப்பு குறைவாக உள்ள தொலைதூரப் பகுதிகளில்
பயனர்களையும் இணைக்கும் திறனையும் வழங்குகிறது.
எனினும் கிராமப்புறங்களுக்கு இதன் சேவையை கொண்டு செல்வதற்கு அதிக செலவு ஒரு
தடையாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்லிங்க் வலைத்தளத்தின்படி, குடியிருப்பு பயனர்கள் வரம்பற்ற தரவுகளுக்கு
15,000 மாதாந்த சந்தாவுடன், மேலதிகமாக 118,000 ரூபாயை ஒரு முறை வன்பொருள்
கட்டணமாக செலுத்த வேண்டும்.
இது சாதாரண மக்களுக்கு இந்த சேவையை அனுகுவதற்கு தடையாக இருக்கும் என்று
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
