Home இலங்கை சமூகம் அரச வங்கி ஓய்வூதியர்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அரச வங்கி ஓய்வூதியர்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

அரச வங்கி ஓய்வூதியர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 3000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு அரச வங்கியின் ஓய்வூதியர் அமைப்பு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அரச வங்கிகளான மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றின் தலைவர்கள்  3000 ரூபா கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் காரணமாக 3000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் (ஒக்டோபர்) முதல்  கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

 

இதேவேளை, அரச மற்றும் தனியார் வங்கிகளில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் நேற்று முன் தினம் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன், தபால் நிலையங்கள் மற்றும் உப அலுவலகங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் இந்தக் கொடுப்பனவை இன்று (18 ஆம்) திகதி முதல் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, 679,960 ஓய்வூதியதாரர்களுக்கு இந்த மாதத்திற்கான 2,021 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை திறைசேரி செயற்பாட்டுத் திணைக்களம், ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

NO COMMENTS

Exit mobile version