Home இலங்கை அரசியல் அரசின் அடக்குமுறைக்கு எதிராக மக்களை விழிப்புணர்வு செய்ய புறப்பட்டுள்ள ஐக்கிய எதிர்க்கட்சி

அரசின் அடக்குமுறைக்கு எதிராக மக்களை விழிப்புணர்வு செய்ய புறப்பட்டுள்ள ஐக்கிய எதிர்க்கட்சி

0

அரசின் அடக்குமுறைக்கு எதிராக மக்களை விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்ற
நோக்கில் எதிர்க்கட்சிகளின் பொதுச் செயலர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலானது இன்று(1) மாலை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

இது தொடர்பில் ரஞ்சித் மத்தும பண்டார கருத்து தெரிவிக்கையில் ,  அரசின் அடக்குமுறைக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் பல்வேறு
எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.

இதற்காக ஐக்கிய எதிர்க்கட்சி ஒருமித்த நிலைப்பாட்டில் இருப்பதாகவும், மேலும்
கலந்துரையாடல் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த கலந்துரையாடலில்,
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல, இலங்கை சுதந்திரக்
கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க உள்ளிட்டோர் பங்கேற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version