Home இலங்கை குற்றம் நண்பனின் வீட்டில் கைவரிசை காட்டிய இளைஞன்: பொலிஸார் தீவிர விசாரணை

நண்பனின் வீட்டில் கைவரிசை காட்டிய இளைஞன்: பொலிஸார் தீவிர விசாரணை

0

முல்லைத்தீவு (Mullaitivu)- கைவேலி பகுதியில்  நண்பனின் வீட்டில் வங்கி இலத்திரனியல் அட்டையை திருடி நபரொருவர் பொருட்களை கொள்வனவு செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம், நேற்று (12) இடம்பெற்றுள்ளது.

இது  தொடர்பில் தெரியவருகையில் ,கைவேலி பகுதியில் உள்ள நண்பனின் வீட்டிற்கு குற்றம் சுமத்தப்பட்ட இளைஞன் சென்றதுடன், வீட்டில் உள்ளவர்களிடம் உரையாடலை முன்னெடுத்துள்ளார்.

இதன்போது நண்பனுடைய தந்தையின் வங்கி இலத்திரனியல்
அட்டையினை சூதானமான முறையில் திருடிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, குறித்த நபர் வங்கி இலத்திரனியல் அட்டை மூலம்  ஆடைகள், சப்பாத்து, மது என
1,80,000 ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளார்.

தேடும் பணி

இந்நிலையில், இளைஞன் பொருட்களை கொள்வனவு செய்யும் போது இலத்திரனியல் அட்டை
உரிமையாளருக்கு குறுஞ்செய்தி தொலைபேசிக்கு அனுப்பப்பட்டுள்ளது..

இதனையடுத்து உரிமையாளர்
விரைந்து குறித்த இளைஞன் கொள்வனவு செய்த கடைக்கு சென்று சோதனை
செய்தபோது தனது மகனின் நண்பரே திருடியமை தெரியவந்துள்ளது.

பின்னர் வங்கிக்கு
தகவல் வழங்கப்பட்டு வங்கி கணக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதோடு,  குறித்த இளைஞனை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version