Home இலங்கை சமூகம் 77 நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு நிகழ்நிலை பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை

77 நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு நிகழ்நிலை பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை

0

77 நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு நிகழ்நிலை(Online) மூலம் பிறப்பு சான்றிதழை
வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பதிவாளர் திணைக்களத்தின் பதிவாளர்
நாயகம் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பதிவாளர்களை சந்தித்து
கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  

“அமைச்சுடன் இணைந்து இலங்கைக்கு வெளியே 77 நாடுகளில் வசிக்கின்ற
பிரதிகள் தங்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை நிகழ்நிலையாக பெற முடியும்.

மக்களின் சேவை

நாங்கள் இரு வாரங்களுக்கு முன்பாக 7 நாடுகளோடு இணைந்து இந்த விடயம் தொடர்பில்
கலந்துரையாடினோம். அது சாத்தியமாக அமைந்துள்ளது.

வெளிநாட்டில் இருப்பவர்களும்
எங்களுடைய பிரஜைகள் என்ற அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

பதிவாளர் திணைக்களத்தின் பணிகள் பரந்துபட்டது.

யாழ்ப்பாணத்தில் பெண் பதிவாளர்கள்
அதிகமாக இருப்பதால் எமக்கு வேலை செய்வது இலகுவாக அமைந்துள்ளது. பிறப்பு இறப்பு
திருமண விடயங்களில் பெண்களின் கவனம் அதிகமாக இருக்கும். மக்களின் சேவையை
மேம்படுத்தி நடக்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version