சுங்க வரி ஏய்ப்புச் செய்வோர் மற்றும் நிறுவனங்கள் குறித்த விபரங்களை பகிரங்கப்படுத்த நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைச் சுங்கத்திணைக்களத்தின் சட்டதிட்டங்களை மீறி, வரி ஏய்ப்புச் செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் அபராதத் தொகை விதிப்பது மட்டுமே இதுகாலவரைக்குமான தண்டனையாக இருந்தது.
இந்நிலையில் அவ்வாறான நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய விபரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பகிரங்கப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி சட்டம்
அதன்மூலம் அரசாங்கத்துக்குச் சேர வேண்டிய வரிப்பணத்தை உரிய முறையில் சேகரித்துக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டங்களை மீறுவதைத் தடுக்கவும், சட்டவிரோதமாக நாட்டினுள் பொருட்கள் கடத்தி வரப்படல் அல்லது கடத்திச் செல்லப்படுதலை மட்டுப்படுத்தவும் இந்த செயற்பாடு உதவும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சுங்கத்திணைக்களத்தின் சட்டதிட்டம்
அதே போன்று இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சட்டரீதியான வணிகத்தை மேற்கொள்ளும் வர்த்தகர்களுக்கும் ஒரு ஊக்குவிப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் பிரகாரம் சுங்கத்திணைக்களத்தின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக குற்றவாளிகளாக இனம் காணப்படும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய விபரங்களை எதிர்வரும் ஜுன் மாதம் தொடக்கம் பகிரங்கப்படுத்தப்படவுள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் இணையத்தளம் வழியாக குறித்த விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
