Home இலங்கை சமூகம் மறைந்து போகும் அபாயத்தில் நெடுங்கழித் தூண்டில் மீன்பிடி நடவடிக்கை

மறைந்து போகும் அபாயத்தில் நெடுங்கழித் தூண்டில் மீன்பிடி நடவடிக்கை

0

தென்னிலங்கையின் கொக்கலைக் கடற்கரையோரத்தின் பாரம்பரியமான நெடுங்கழித் தூண்டில் மீன்பிடித் தொழில் (Stilt Fishing) மறைந்து போகும் அபாயம் எழுந்துள்ளது.

கொக்கலை கடற்கரையோரமாக நெடுங்கழிகளில் உட்கார்ந்தபடி தூண்டில் போட்டு மீன்பிடிக்கும் தொழிலாளர்கள், தென்னிலங்கை செல்லும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஆகர்ஷணங்களில் ஒன்றாக நீண்ட காலமாக விளங்கி வருகின்றார்கள்.

குறித்த நெடுங்கழிகளில் ஏறி புகைப்படம் எடுத்துக் கொள்வது, காணொளிக் காட்சிகளைப் பதிவு செய்வது என்பன வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்றாகவும் உள்ளது.

நெடுங்கழித்தூண்டில் தொழில்

இவ்வாறான நிலையில் நெடுங்கழித்தூண்டில் தொழில் தற்போது முற்றாகக் கைவிடப்படும் அபாயம் எழுந்துள்ளது.

தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் காரணமாக கரையோரத்துக்கு வரும் சிறுமீன்கள் இப்போது முற்றாகக் குறைந்துவிட்டதாக பாரம்பரிய தொழிலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அதன் காரணமாக நீண்ட நேரமாக வெயிலைத் தாங்கிக் கொண்டு நெடுங்கழிகளில் அமர்ந்திருந்தாலும் தூண்டிலில் மீன்கள் சிக்குவதில்லை என்பதால் சுற்றுலாப்பயணிகள் முன்பு போல இப்போது நெடுங்கழித் தூண்டில் மீன்பிடித்தலில் சடவடிக்கையில் ஆர்வம் காட்டுவதில்லை என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version