Home இலங்கை குற்றம் திருடப்பட்ட திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய ஜீப் கண்டுபிடிக்கப்பட்டது

திருடப்பட்ட திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய ஜீப் கண்டுபிடிக்கப்பட்டது

0

திருடப்பட்ட திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலைய ஜீப், எல்லகல பகுதியில் கைவிடப்பட்ட
நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜீப் கண்டுபிடிக்கப்பட்டபோது, அதன் இயந்திரம் நிறுத்தப்பட்டு, சாவி
சாவித்துவாரத்தில் இருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சாரதி மீது ஒழுக்காற்று நடவடிக்கை

ஜீப் திருடப்பட்ட இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில்
நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அந்த அதிகாரி கூறினார்.

ஜீப்பை யார் திருடினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும், விசாரணைகள்
நடந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இயந்திரம் இயக்கப்பட்ட நிலையில் பிரதான வீதியில் ஜீப்பை
நிறுத்தி விட்டு சென்ற சாரதி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் பொலிசார்
நடவடிக்கை எடுத்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version