Home இலங்கை சமூகம் தேர்தல் கருத்துக் கணிப்புகள்: கவனம் செலுத்தும் ஆணைக்குழு

தேர்தல் கருத்துக் கணிப்புகள்: கவனம் செலுத்தும் ஆணைக்குழு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு சமூக ஊடகங்கள் ஊடாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகள் மற்றும் கணக்கெடுப்புகளை நிறுத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வாரம் கூடவுள்ள ஆணைக்குழு கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக ஆணைக்குழுவின் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைதளங்கள் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தி சில வேட்பாளர்கள் பாரபட்சம் காட்டுவதாகக் கூறும் தவிசாளர், அதற்கான கருத்துக் கணிப்புகளை யார் நடத்துகிறார்கள் என்பதை கண்டறிய இந்த நாட்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

கருத்துக் கணிப்பு

அப்போது கருத்துக் கணிப்புகளை நிறுத்தும் முறை குறித்து ஆலோசிக்கப்படும் எனவும், ஆனால் சமூக வலைதளங்கள் மூலம் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை நிறுத்துவது எளிதான காரியம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் பதிவுகள், காணொளிகளை நீக்குவதாக சமூக ஊடகங்களின் இயக்குனர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஏற்கனவே உறுதியளித்துமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version