Home இலங்கை சமூகம் கைக்குண்டுடன் மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவன் : காவல்துறையினர் நடவடிக்கை

கைக்குண்டுடன் மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவன் : காவல்துறையினர் நடவடிக்கை

0

கண்டி (Kandy) ஹசலக்க பிரதேசத்தில் மேலதிக வகுப்புக்கு சென்ற மாணவன் கைக்குண்டு ஒன்றை  கொண்டு சென்றுள்ளதாக ஹசலக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், 15 வயதுடைய இந்த மாணவன் வீட்டிற்கு அருகில் உள்ள ஆற்றில் நீராடிக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த மாணவன் கைக் குண்டை தனது மேலதிக வகுப்புக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அங்கிருந்த மேலதிக வகுப்பு ஆசிரியரிடம் அதனைக் காண்பித்துள்ளார்.

காவல்துறையினருக்கு தகவல்

இந்தநிலையில், மேலதிக வகுப்பு ஆசிரியர் இது தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளதுடன் கைக் குண்டை பாதுகாப்பாக காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து, இந்த கைக்குண்டு காவல்துறை விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/student-brought-a-hand-grenade-to-class-1718874500

NO COMMENTS

Exit mobile version