Home இலங்கை கல்வி தமிழர் பகுதியில் சவால்களை வென்று சாதனை படைத்த மாணவன்

தமிழர் பகுதியில் சவால்களை வென்று சாதனை படைத்த மாணவன்

0

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகி இருந்தன.

இதில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்களின் பெறுபேறுகள் வெளியாகிய வண்ணம் இருந்தது.

இந்நிலையில், தன்னுடைய குறைபாடுகளை கருத்தில் கொள்ளாது Laxman Leonshan என்ற மட்டக்களப்பு கருவேப்பங்கேணி விபுலானந்தக் கல்லூரியில் கல்வி கற்ற மாணவனே 9ஏ தித்தியைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

முடங்கிக் கிடக்கும் பல திறமையாளர்கள்

பிறந்து 26 நாட்களில் எலும்புகளில் பாதிப்பு காணப்பட்டதால் குறித்த மாணவனால் தனியாக நடந்து எங்கும் நடந்து செல்ல முடியாது.

இதனால் தன்னை தமது பெற்றோரே எங்கும் அழைத்துச் செல்வதாக மாணவன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்ட மாணவன் நம்மிடம் குறைபாடுகள் எவ்வளவுதான் இருந்தாலும் அந்த குறைபாடுகளை எல்லாம் தாண்டி வாழ்க்கையில் சாதிக்க வேண்டும்.

மேலும் .நம்மிடம் உள்ள திறமைகளை முடிந்த வரையில் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, இந்த மாணவனுடைய குறித்த சாதனையானது முடங்கிக் கிடக்கும் பல திறமையாளர்களுக்கான ஒரு உந்துகோலாக காணப்படும் என்பதில் ஐயமில்லை.  

NO COMMENTS

Exit mobile version