Home இலங்கை குற்றம் யாழில் தவறான முடிவால் உயிரை மாய்த்த மாணவி

யாழில் தவறான முடிவால் உயிரை மாய்த்த மாணவி

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) பரீட்சையினை திருப்திகரமாக எதிர்கொள்ள முடியவில்லை என்ற விரக்தியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

இதன்போது தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் கல்வி பயின்ற
சிறிகேசவன் ஸ்ரெபிகா (வயது 19) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனை

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவி நேற்று முன்தினம் (30) பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீட்டுக்கு
வந்துள்ளார்.

குறித்த பரீட்சை திருப்திகரமாக இல்லை என தாய் – தந்தையருக்கு
கூறி கவலையடைந்துள்ளார்.

பின்னர் அவரது தந்தை வெளியே சென்றவேளை
குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயவாலசிங்கம்
மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version