Home இலங்கை சமூகம் யாழில் திடீரென மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

யாழில் திடீரென மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) பாடசாலை  மாணவன் ஒருவர் திடீரென வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவமானது சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் இன்றையதினம் (16) இடம்பெற்றுள்ளது.

தொல்புரம் பகுதியைச் சேர்ந்த
தவராசா கோபிக்குமரன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 உயிரிழப்பு

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த மாணவன் அவரது நண்பருடன் இன்று(16) மதியம் கடைக்கு சென்ற போது சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இந்தநிலையில் , மாணவனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உடற்கூற்று பரிசோதனை

இதனையடுத்து சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம்
மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, மாணவனுக்கு இதய வால்வில் ஏற்பட்ட சுருக்கம் காரணமாகவே இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Source: https://ibctamil.com/article/student-dies-after-falling-on-road-in-jaffna-1718560094

NO COMMENTS

Exit mobile version